முகப்புகோலிவுட்

சூர்யா 39வது படத்திற்கு கைகோர்க்கும் கூட்டணி இதுதான்

  | April 22, 2019 19:50 IST
Suriya 39

சூர்யாவின் 39 வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

சிவா இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, அனிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்து விஸ்வாசம் படம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. இப்படம் பேட்ட படத்தை விட வெகுவாக ஆதாரவை பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து சிவா அடுத்து யாரை இயக்கவுள்ளார் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் சூர்யாவின் 39 வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த படம் முடிந்தவுடன் அஜீத்தை இயக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் எனத் தெரிகிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா என்ஜிகே படம் மே 31 வெளிவரவுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய காப்பான் படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்