முகப்புகோலிவுட்

காப்பான் படத்தை அடுத்து சூர்யாவுடன் கை கோர்க்கும் ஆர்யா?

  | September 23, 2019 17:30 IST
Suriya

துனுக்குகள்

 • காப்பான் படத்தை அடுத்து சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்
 • காப்பான் படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றது
 • சூர்யா ஆர்யா கூட்டணி மீண்டும் இணைகிறது
நாடு முழுவதும் கடந்த வாரம் சூர்யா நடிப்பில் காப்பான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்து சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது.
 
காப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்யா. தற்போது மீண்டும் சூர்யா, ஆர்யா இருவரும் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' படம் டிராப் ஆனது. இதையடுத்து பாலா அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார்.
 
இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள், அவன் இவன் போன்ற படத்தில் ஆர்யாவும், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com