முகப்புகோலிவுட்

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் முதல் முறையாக இணையும் சூர்யா - கார்த்தி.?

  | June 01, 2020 15:17 IST
Ayyappanum Koshiyum

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘ஆடுகளம்', ‘ஜிகர்தண்டா' படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகர்கள் என்ற பெருமையை நீண்ட காலமாக அனுபவிக்கும் முதல் உடன்பிறப்புகள் சூரியா மற்றும் கார்த்தி. அவர்கள் வணிக ரீதியான ஹிட் படங்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர்களாவர். மேலும், இவர்களுக்கு ஒரு பெரும் ரசிகர் பிந்தொடர்பாளர்கள் உள்ளனர்.

இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால கனவாக இருந்தது, அது விரைவில் நடப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரிகிறது.

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த மலையாள ஹிட் திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்' தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘ஆடுகளம்', ‘ஜிகர்தண்டா' படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் பெற்றுள்ளார். தமிழில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனனுக்கு இணையாகத் திறமை வாய்ந்த நடிகர்களைத் தேடுவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். அதையடுத்து, தனுஷ், சசிகுமார் இந்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த மிரட்டலான மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் சூர்யா மற்றும் கார்த்தி சகோக்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், விரைவில் ஹரி இயக்கும் ‘அருவா' படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அதேபோல், கார்த்தி ‘சுல்தான்', மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ஹவில்தார் மற்றும் துணை ஆய்வாளருக்கு இடையிலான மோதலைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சச்சி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com