முகப்புகோலிவுட்

சூர்யா திடீர் விசிட்! இன்ப அதிர்ச்சியில் ஜோதிகா படக்குழு!

  | September 17, 2019 11:39 IST
Suriya

துனுக்குகள்

 • ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடிந்து வருகிறது
 • இப்படத்தின் படப்பிடிப்புக்கு சூர்யா சென்றது படக்குழுவினர் மகிழ்ச்சி
 • பொன்மகள் வந்தால் படத்தை ஜெ.ஜெ. பெட்ரிக் இயக்குகிறார்
பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த ஜோதிகா திருமணத்திற்கு பின்  ஜோதிகா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின் சில ஆண்டுகளுக்கு
பிறகு  ‘36 வயதினிலே' படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
 
திருமணத்திற்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர். ‘மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'செக்கச்சிவந்த வானம்' என்று தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி', ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருந்த ‘ஜாக்பாட்' போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இதையடுத்து, அவர் சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்' படத்தில் நடித்து வருகிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த சூர்யா, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து படக்குழுவினர் அவரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது வருகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com