முகப்புகோலிவுட்

சூரரை பேற்று படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சூர்யா!

  | September 27, 2019 19:31 IST
Suriya

துனுக்குகள்

  • இறுதி சுற்று படத்தை அடுத்து சுதா கொங்காரா இயக்கும் படம் இது
  • இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது
  • படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து தங்க நாணயம் பரிசு கொடுத்துள்ளார் இவர்
இறுதி சுற்று படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட பெண் இயக்குநர் சுதா கொங்காரா மீண்டும் இயக்கி வரும் படம் ‘சூரரை போற்று'. இந்த படத்தில் சூர்யாவிற்க ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
 
மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார் 40 நாட்கள் வரை நீடித்து வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 3 நாட்கள் சிறுசிறு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளன. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க காசுகளை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. பிகில் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய் படக்குழுவில் பணியாற்றிய பணியாளர்களுக்கு இதே போல் தங்கம் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்