முகப்புகோலிவுட்

புதிய கல்விக்கொள்கை குறித்து ஏன் யாரும் பேசவில்லை; சூர்யா சீற்றம்!

  | July 15, 2019 11:17 IST
Suriya

துனுக்குகள்

  • அகரம் பவுண்டேசன் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது
  • புதிய கல்விக்கொள்ளை குறித்து அகரம் பவுண்டேசன் சார்பாக விவாதிக்கப்பட்டது
  • அகரம் பவுண்டேசன் சார்பாக 40ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது
அகரம் பவுண்டேசன் சார்பில், 40 ஆம் ஆண்டு பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள், கல்யாணி, வசந்தி தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசும் போது,
 
“இந்த கல்வி கொள்கை இந்தியாவில் உள்ள 30கோடி மாணவர்களின் எதிர்காலம். இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை என்கிற கோபம் எனக்கு இருக்கு. மறுபடியும் பறுபடியும் தேர்வு, தகுதி தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் இருக்கும் கவனம் தரமான சமமான கல்வியை கொடுக்காமல் மாணவர்கள் எப்படி இது போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.
 
ஓரே ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.
 
ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள்  பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை.
 
ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது. கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. 50 ஆயிரம் கல்லூரிகளை 12 ஆயிரம் கல்லூரிகளாக குறைக்க முயற்சி நடக்கிறது.  கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைத்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்.
 
60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம்.  10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது சரியல்ல என கூறினார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி இன்னும் பலர் கலந்துக்கொண்டனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்