முகப்புகோலிவுட்

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

  | July 15, 2019 12:45 IST
Jyothika

துனுக்குகள்

  • ஜாக்பாட் படத்தை அடுத்து ஜோதிகா நடிக்கும் படம் இது
  • இவர் நடிப்பில் வெளியா ராட்சசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் ‘ஜாக்பாட்' படத்தில் நடித்து வருகிறார். கல்யாண்  இயக்கும் இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
 
இதனை அடுத்து நடிகை ஜோதிகா 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் அடுத்து கைக் கோர்த்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இந்த படத்தை இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்க ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோவிந்த வசந்தா  இசை அமைக்க ரூபன்  எடிட்டிங் செய்கிறார். விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு மேலும்  இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்