முகப்புகோலிவுட்

சூர்யாவிடம் வாழ்த்து பெற்று சைகிளிங் போட்டிக்காக பிரான்ஸ் போகும் ஆர்யா!

  | August 19, 2019 17:14 IST
Suriya

துனுக்குகள்

 • சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திர்த்தில் நடித்துள்ளார் இவர
 • பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ் எனும் சைக்கிள் போட்டியில் கலந்துக்கொள்கிறார்
 • ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார்
அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா மதராசப்பட்டினம், ‘நான் கடவுள்', ‘ராஜா ராணி', உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மகாமுனி, காப்பான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். மேலும் சாயிஷாவை திருமணம் செய்த பிறகு இருவரும் சேர்ந்து நடித்து வரும் ‘டெடி' திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.
 
திரைப்படங்களில் நடிப்பதோடு இல்லாமல், நடிகர் ஆர்யா சைக்கிளிங் செய்வதில் அதிகம் ஆர்வம் உடையவர். இவர் ஞாயிறு தோறும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரம் வரை சென்று சைக்கிளிங் செய்வது வழக்கம். நடிகர் சங்க தேர்தலின் போது கூட நடிகர் ஆர்யா தனது வாக்கினை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார்.
 
 சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ் எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்கும் போட்டியில்  ஆர்யாவின் அணி கலந்து கொள்ள இருக்கிறது.
 
இப்போட்டியில் கலந்து கொள்ள போகும் ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார். ஆர்யா அணி சிறப்பாக சைக்கிள் ரைடு செய்து வெற்றிபெற தனது வாழ்த்தினை தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com