முகப்புகோலிவுட்

சூர்யாவின் 'என்.ஜி.கே' படக்குழு வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

  | May 23, 2019 13:15 IST
Surya

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • சாய் பல்லவி இப்படத்தில் நடித்திருக்கிறார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம்  ‘என்.ஜி.கே'. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைத்தனர்.
 
 
இந்நிலையில், நேற்று இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. முதலில் இப்படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிட்டது படக்குழு. இதற்குமுன் விஜய்யின் ‘மெர்சல்', ரஜினியின் ‘காலா' படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டார்கள். தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே' படத்திற்கு வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் டயலாக் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்