முகப்புகோலிவுட்

“பலருக்கும் ஒரு உத்வேகம்” சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ்.!

  | July 23, 2020 18:25 IST
Suriya

"சூரரைப் போற்றுக்காக காத்திருக்கிறோம், உங்களிடமிருந்து இன்னும் பல சிறந்த திரைப்படங்கள் மற்றும் தருணங்களை எதிர்பார்க்கிறோம்"

இயக்குநர் விக்னேஷ் சிவன் எப்போதும் நடிகர் சூரியாவைப் போற்றுவதை பார்க்கமுடியும். ஸ்பெஷல் 26 என்ற இந்தி திரைப்படத்தின் தழுவலான 2018-ஆம் ஆண்டில் ‘தானாசேர்ந்த கூட்டம்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். அவர்கள் ஒன்றாகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, விக்னேஷ்சூரியாவைப் பற்றியும், தனது படத்துக்காக அவர் கொடுத்த உழைப்பைப் பற்றியும் பேசியுள்ளார்.

சூரியாவின் பிறந்த நாளில், இன்று, விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக கணக்கில் சூரியா எப்படி நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறார் என்பதைப் பற்றி ஒரு நீண்ட பதிவினை எழுதினார். தனது பதிவில், சமுதாயத்தின் மீதும் தனக்கு அவ்வளவு அன்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “எங்கள் அன்பான சூரியா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம்மில் பலருக்கு ஒரு வாழும் உத்வேகம் அவர். சமுதாயத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு அற்புதமான மனிதர், மேலும் எப்போதும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது தனது பொறுப்பாக எடுத்துக்கொள்கிறார்! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சார்! ஒரு அற்புதமான பிறந்த நாள் & ஒரு வெற்றிகரமான ஆண்டு.. சூரரைப் போற்றுக்காக காத்திருக்கிறோம், உங்களிடமிருந்து இன்னும் பல சிறந்த திரைப்படங்கள் மற்றும் தருணங்களை எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சூரியாவின் சூரரைப் போற்று திரைப்படம் தனிக்கைச் சான்றிதழையும் பெற்று வெளியீட்டுக்காக முழுமையாக தயாராக இருக்கிறது. இந்த லாக்டவுனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்' மற்றும் ஹரி இயக்கத்தில் ‘அருவா' ஆகிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.

அதேபோல், விக்னேஷ் சிவன் ‘காத்துவாக்குலரெண்டுகாதல்' படைடிப்பை தொடங்க காத்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com