முகப்புகோலிவுட்

‘சூரரைப் போற்று’ படத்தை மேலும் சிறப்பாக்கியவருக்கு நன்றி சொன்ன சூர்யா.!

  | August 05, 2020 23:01 IST
Suriya

"ஒவ்வொரு முறையும் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளும் விதத்தால் முற்றிலும் ஈர்க்கப்படுகிறேன்"

செல்வராகவனின் என்.ஜி.கே வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுக்கு வெளிவர உள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று'. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கும் இந்த படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. ‘சூரரைப் போற்று' படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் பிரபல தமிழ் நடிகர் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தைத் தயாரித்து வழங்குகின்றது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் நடந்து முடிந்து தற்போது ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது.

alhc5cpo

இரு வாரங்களுக்கு முன் இப்படத்திலிருந்து ‘காட்டுப் பயலே' பாடல் வெளியானது. சினேகனின் பாடல் வரிகளில் பாடகி தீ பாடியுள்ள இந்த பாடல் செம வைரலாகிவருகிறது.

இந்நிலையில், இப்படல் இந்த வார்த்தில் இந்தியாவின் சிறந்த 100 பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதற்கு ரசிகர்களிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் ஜி.வி. பிரகாஷ்.

அந்த ட்வீட்டுக்கு நடிகர் சூர்யா இன்று பதிலளித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில் “ஒவ்வொரு முறையும் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளும் விதத்தால் முற்றிலும் ஈர்க்கப்படுகிறேன், சூரரைப் போற்றுவை மேலும் சிறப்பாக்கியதற்கு நன்றி ஜி.வி.பிரகாஷ்” எனக் குற்ப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com