முகப்புகோலிவுட்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவுக்கு அடித்த “ஜாக்பாட்”

  | May 02, 2019 15:46 IST
Jyothika

துனுக்குகள்

  • இப்படத்தை கல்யாண் இயக்குகிறார்
  • சூர்யா இப்படத்தை தயரித்துருக்கிறார்
  • நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்கள்
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் 11வது படம் ‘ஜாக்பாட்'
ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன.  சூர்யாவின் தயரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் 3வது முறையாக நடிக்கிறார் ஜோதிகா.
 
திருமணத்திற்குப் பின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. அதன் அடிப்படையில் இவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
 
அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த “ஜாக்பாட்” படமும் இணையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு  முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்துள்ளது.
 
படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேச் இருக்கும் என்றும்  எதிர்பார்க்கப்டுகிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்