முகப்புகோலிவுட்

சூரரைப் போற்று OTT-ல் வெளியாகுமா.? சூர்யாவின் நிலைப்பாடு என்ன..?

  | June 01, 2020 20:03 IST
Soorarai Pottru

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

சூர்யா தனது அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நேரடி OTT வெளியீட்டை ஆரம்பித்தவர் சூர்யா, பல திரையரங்க உரிமையாளர்கள் அவரது முடிவை எதிர்த்த போதிலும், அவர் தனது 2டி எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த ‘பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டார்.

எனவே அவரது ‘சூரரைப் போற்று' படத்தினைக் கூட நேரடியாக OTT தளங்களில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. இருப்பினும், சூர்யா தனது பின்தொடர்பவர்களுடன் ஒரு ஆன்லைன் உரையாடலில் ஈடுபட்டபோது, தனது அடுத்த திட்டங்கள் பற்றி வெளிப்படுத்தினார்.

அப்போது, ‘சூரரைப் போற்று' முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா தனது ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார், மேலும் அவர் அதில் நிறைய முயற்சி செய்ததால் இது அவருக்கு ஒரு சிறப்பு படம். ஒரு படம் திரையரங்க வெளியீட்டைப் பெறுவது போல் சரியான விஷயம் எதுவும் இல்லை என்றும் சூரியா உணர்கிறார், மேலும் பெரிய திரைகளில் இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமை இப்படத்திலிருந்து மூன்று வெவ்வேறு வகையான பாடல்கள் இதுவரை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன, மீதமுள்ள இரண்டு பாடல்களையும் பின்வரும் நாட்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com