முகப்புகோலிவுட்

“போராடுவதே தப்பு என்றால் போராட தூண்டுவதும் தப்பு தானே” – காப்பான் டீசர்

  | April 15, 2019 14:33 IST
Kaappaan Movie Teaser

துனுக்குகள்

  • இப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கி இருக்கிறார்
  • ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பை பெற்று வருகிறது.
 
0e8efl7o

 
படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருப்பதாக முன்னதாக மலையாள தனியார் ஊடகத்தில் பேசும் போது சூர்யா தெரிவித்திருந்தார்.
 
t71cth6

 
தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதியா தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான? உள்ளிட்ட வசனங்கள் தற்போதைய தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.
 
ceca6t3o
 
 
j68ssvlo

இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார்.
 
jasdf8c8

நீங்கள் தட்டி எழுப்பி இருப்பது தூங்கிக்கொண்டிருந்த புலியை சீண்டி இருக்கிறீர்கள் பாயுவதற்கு ரொம்ப நேரம் ஆகாது. மோன்லாலின் வசனங்கள் மிரட்டுகிறது. ஹரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மிரட்டலாகவும் கதைக்களத்தை விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறது.  
 
cm41eepg

 
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 30-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்