முகப்புகோலிவுட்

அதிர்ச்சி தகவல்! காப்பான் ரிலீஸ் தேதி மாற்றம்!!

  | August 05, 2019 15:00 IST
Suriya

துனுக்குகள்

  • வரும் செப்டம்பர் 20ல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்
  • இப்படத்தில் பாரத பிரதமராக நடிக்கிறார் மோகன்லால்
  • சாயிஷா இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்
என்.ஜி.கே படத்தை அடுத்து சூர்யா, கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்'. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்டு 30ம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே தேதியில் பிரபாஷின் ‘சஹோ' படமும் வெளியாக இருந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்