முகப்புகோலிவுட்

இணையத்தை அதிர வைக்கும் ‘காப்பான்’ படத்தின் சிறுக்கி பர்ஸ்ட் சிங்கிள்!!!

  | July 05, 2019 18:14 IST
Kaappaan

துனுக்குகள்

  • கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தை தொடர்ந்து இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கி இருக்கும் காப்பான் படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க இவர்களுடன் ஆர்யா, சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்திருக்கிறார்.
இப்டத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில் பாடலான சிறுக்கி பாடல் வெளியாகி  சமூகவலைதளங்களை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் வரிகளோடு வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் சூர்யாவை இளமையான தோற்றத்தில் காண்பிக்கின்றன. மீண்டும் அவர் 10 ஆண்டுகள் வயது குறைந்த இளைஞராக தோன்றுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்