முகப்புகோலிவுட்

ரஜினி, விஜய் வரிசையில் ட்விட்டரை கலக்கும் சூர்யா..!

  | May 20, 2019 18:28 IST
Ngk

துனுக்குகள்

  • இப்படத்தை செல்வராகவன் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் சாய் பல்லவி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்
  • ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம்  ‘என்.ஜி.கே'. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், என்.ஜி.கே படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குமுன் விஜய்யின் ‘மெர்சல்', ரஜினியின் ‘காலா' படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டார்கள். தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே' படத்திற்கு வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்