முகப்புகோலிவுட்

சூர்யாவின் 'என்.ஜி.கே' அட்டகாசமான அறிவிப்பு...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

  | May 22, 2019 18:06 IST
Ngk

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது
 
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம்  ‘என்.ஜி.கே'. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியி இருக்கிறது. முதலில் இப்படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிட்டது படக்குழு. இதற்குமுன் விஜய்யின் ‘மெர்சல்', ரஜினியின் ‘காலா' படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டார்கள். தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே' படத்திற்கு வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி இருப்பதால் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்