முகப்புகோலிவுட்

ரிலீஸுக்கு பக்காவாக காத்திருக்கும் ‘சூரரைப் போற்று’! தணிக்கைச் சான்றிதழ் பெற்றது..

  | June 06, 2020 15:58 IST
Suriya

இப்படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் பிரபல தமிழ் நடிகர் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

என்.ஜி.கே வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுக்கு வெளிவர உள்ள திரைப்படம் தான் ‘சூரரைப் போற்று'. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கும் இந்த படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. ‘சூரரைப் போற்று' படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் பிரபல தமிழ் நடிகர் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தைத் தயாரித்து வழங்குகின்றது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் நடந்து முடிந்து தற்போது ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ‘Making of Maara - part 1' என்ற தலைப்பில், இப்படம் படமாக்கப்பட்ட விதத்தை வீடியோவாக படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பாடாத நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இப்போது இப்படம் பெரிய திரைக்கு வர முழுமையாக தயாரகிவிட்டது. அதாவது இப்படத்துக் தற்போது தணிக்கை குழுவிடமிருந்து தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எதிர்ப்பார்த்ததைப் போலவே இப்படம் ‘U' சான்றிதழ் பெற்றுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com