முகப்புகோலிவுட்

அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் - இன்று மாலை வெளியாகும் ஒரிஜினல் BGM..!!

  | June 23, 2020 15:53 IST
Imaikkaa Nodigal

துனுக்குகள்

 • ‘டிமான்ட்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’
 • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க, ஹிப் ஹாப் தமிழா
 • இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ஒரிஜினல் BGM
‘டிமான்ட்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்' திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியிருந்தார். பவர்ஃபுல்லான வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘ருத்ரா' எனும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்த இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

மக்கள் மற்றும் விமர்சகர்களிடன் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ஒரிஜினல் BGM வெளியாக உள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஆதி  உறுதிப்படுத்தியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com