முகப்புகோலிவுட்

சூர்யா-ஜோதிகா கொடுத்த தமிழ்ப் புத்தாண்டு பரிசு..!

  | April 15, 2020 15:23 IST
Surya

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் அதன் 9-வது திரைப்படமாகத் தயாரிக்கிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்'. இப்படத்தை JJ Fredrick எழுதி இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் அதன் 9-வது திரைப்படமாகத் தயாரிக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடந்த மாதம் இப்படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மார்ச் 27-ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்களுடன், ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ஒரு அசத்தலான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மண்ட் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும்! இப்போது பாதுகாப்பாக இருப்போம், பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்ப்போம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த புதிய போஸ்டரில் ஜோதிகாவுடன் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன், தியாகராஜன் ஆகியோர் இருக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com