முகப்புகோலிவுட்

கார்த்தி-ஜோதிகாவின் ‘தம்பி’ டீஸரை வெளியிட்ட சூர்யா..!

  | November 16, 2019 14:47 IST
Thambi

துனுக்குகள்

  • கார்த்தியின் ‘தம்பி’ பட டீஸர் வெளியானது.
  • இப்படத்தில் கார்த்தியுடன் ஜோதிகா நடித்துள்ளார்.
  • இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்து வெளியாகவிருக்கும் ‘தம்பி' திரைப்படத்தின் டீஸரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘கைதி' திரைப்படம்,  ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் நடிகர் கார்த்தி அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘தம்பி' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சத்தியராஜ், மலையாள நடிகர் அன்சன் பால், நிகிலா விமல், அம்மு அபிராமி  மற்றும் மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், மூத்த நடிகர் சௌகார் ஜானகி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், ‘தம்பி' படத்தின் டீசரையும் இன்று சூர்யா வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா “ஜோ மற்றும் கார்த்தி இருவரும் ஒரே திரையைப் பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! இதோ எனது தம்பி கார்த்தியின் ‘தம்பி' டீசர்” என பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மலையாள டீஸரை மோஹன்லால் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்