முகப்புகோலிவுட்

'சூரரைப் போற்று’ படத்தில்  சூர்யா பாடியுள்ள அசத்தல் பாட்டு!

  | November 19, 2019 11:11 IST
Surya

துனுக்குகள்

 • இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு
 • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்
 • சூர்யா இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்
காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று.  இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் மாறா தீம் மியூசிக்குக்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் Castless collective குழுவின் பாடலாசிரியரும், ரேப் பாடகருமான அறிவும் உடன் இருக்கிறார். இந்த பாடலை அறிவுடன் இணைந்து சூர்யா பாடியிருப்பது உறுதி படுத்துகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com