முகப்புகோலிவுட்

வக்கீலான ஜோதிகா..! வைரலாகும் ‘பொன்மகள் வந்தாள்’ ஃபர்ஸ்ட் லுக்..!

  | March 02, 2020 17:26 IST
Ponmagal Vanthal

சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களின் முன்னணி கதாபாத்திரங்களில் ஜோதிகா நடித்துவரும் நிலையில், இப்படத்துக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை JJ Fredrick எழுதி இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் அதன் 9-வது திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லூக் வெளியாகி வைரலாகிவருகிறது. சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களின் முன்னணி கதாபாத்திரங்களில் ஜோதிகா நடித்துவரும் நிலையில், இப்படத்துக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com