முகப்புகோலிவுட்

ஜோதிகா குடும்பத்துடன் சூர்யா எடுத்த செல்ஃபீ..!! வைரல் ஃபோட்டோக்கள்...

  | November 13, 2019 10:42 IST
Surya

துனுக்குகள்

 • சூர்யாவின் அடுத்த படமாக ‘சூரரைப் போற்று’ வெளியாகவுள்ளது.
 • ஜோதிகா அடுத்ததாக கார்த்தியுடன் நடிக்கவுள்ளார்.
 • ஜோதிகா கார்த்தியுடன் நடிக்கும் படத்திற்கு ‘தம்பி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
நடிகர் சூர்யா தனது குழந்தைகளுடன், அவரது மனைவி ஜோதிகாவின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யா ‘காப்பான்' திரைப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘சூரரைப் போற்று' திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதேபோல, அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவே, ஜோதிகா தனது மைத்துனருடன் நடிக்கும் முதல் படமாகும்.

நடிகர் சிவகுமார் குடும்பத்தோடு இருக்கும் புகைபடங்களும், சூர்யா-ஜோதிகா ஜோடியின் புகைப்படங்களும் அவ்வபோது வெளியாவது வழக்கம். தற்போது சூர்யா தனது பிள்ளைகளோடு ஜோதிகாவின் குடும்பத்தோடு, அவர்கள் வீட்டு செல்லபிரானி உட்பட எல்லோருடனும் சேல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பறவிவருகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com