முகப்புகோலிவுட்

100 மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா..! நடு வானில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ பாடல்..!

  | February 12, 2020 14:25 IST
Surya

சூர்யாவின் ‘சூர்ரைப் போற்று’ திரைப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலை வித்தியாசமாக விண்ணில் பறக்கும் போதே வெளியிடப்படுகிறது.

சூர்யாவின் ‘சூர்ரைப் போற்று' திரைப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலை வித்தியாசமாக விண்ணில் பறக்கும் போதே வெளியிடப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று'. இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், சூர்யா பாடிய ‘மாறா' தீம் பாடலும் முதல் சிங்கிள் ட்ராக்காக வெளியானது. 

இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாடல் ‘வெய்யோன் சில்லி' எனும் பாடல் நாளை வெளியாகிறது. இப்படாலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் பயணிக்கும் போது வெளியிடப்படவுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இதுவரை விமானத்தில் பயணிக்காத 100 அரசு பள்ளி மாணவர்களை இந்த விமானத்தில் அழைத்து செல்கிறார் சூர்யா. இந்த குழந்தைகள் பல அரசுப் பள்ளிகளில் ‘மிகப்பெரிய மற்றும் பிரியமான கனவுகள்' என்ற தலைப்பில் கட்டுறைப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வென்றவர்களாம். தற்போது இந்த புதிய முயற்சிக்காக படக்குழுவை பலரும் பாராட்டிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்