முகப்புகோலிவுட்

சூர்யாவின் மிரட்டலான ‘மாறா தீம்’ பாடல் அவுட்..!

  | January 24, 2020 16:22 IST
Soorarai Pottru

துனுக்குகள்

  • சூரரைப் போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
  • இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் கர்ஜனைக் குரலில் மாறா தீம் பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று'.  இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘மாறா தீம் ' பாடல் வெளியாகியுள்ளது. ‘திமிரு திமிரு திமிருடா' என சூர்யாவின் அழுத்தமான கர்ஜனைக் குறலில் உருவாகியுள்ள இப்பாடல் தற்போது செம வைரலாகிவருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்