முகப்புகோலிவுட்

“ஏன் சமைச்சு ஊட்டிவிடலாமே..!”- ரஜினி பற்றி பேசிய இயக்குநரை வெளுத்துவாங்கிய எஸ்.வி.சேகர்!!

  | March 25, 2020 15:00 IST
Rajini

"ரஜினியை பத்தி பேசியே பிரபமாயிடலாங்கிற உங்க லட்சியம் கடைசிவரை நிறைவேராது"

“ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்"

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய அளவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்த் திரைப்படத் துறையின் ஃபெப்ஸி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பல முன்னணி நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

இது குறித்து இயக்குநர் கௌதமன், “ரஜினி, 50 லட்ச ரூபாய் கொடுத்ததற்கு பதிலாக, மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கலாம்” எனப் பேசியதாக சொல்லப்படுகிறது. 

இதை மேற்கோள்காட்டி எஸ்.வீ.சேகர், “ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்" - முன்னாள் இயக்குனர் கெளதமன் ஆதங்கம்.             
 
ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே. ரஜினியை பத்தி பேசியே பிரபமாயிடலாங்கிற உங்க லட்சியம் கடைசிவரை நிறைவேராது,” என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு, கௌதமனை விமர்சனம் செய்துள்ளார். 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com