முகப்புகோலிவுட்

'என் குருவுடன் நான்' - Throwback புகைப்படம் வெளியிட்ட லாரன்ஸ், Salute அடித்த பிரேம்ஜி..!!

  | June 29, 2020 11:57 IST
Raghava Lawrence

துனுக்குகள்

 • திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக
 • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உதவியால் குரூப் டான்சராக
 • உழைப்பாளி படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் இது
திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார். 

ஆரம்ப நிலையில் அன்றாட உணவிற்கே சிரமப்பட்ட லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உதவியால் குரூப் டான்சராக களமிறங்கினர். அனுதினம் தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று அவர் உலகம் போற்றும் சிறந்த மனிதனாக வலம்வருகிறார் என்றால் அது மிகையல்ல. 

இன்றளவும், தன்னுடைய உயர்விற்கு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை பல மேடைகளில் அவர் சொல்ல தவறுவது இல்லை. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் உழைப்பாளி படத்தில் 'உழைப்பாளி இல்லாத நாடு தான்' என்ற பாடலில் அவரோடு இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "எனது குருவுடன் நான் உழைப்பாளி படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் இது, உழைப்பு என்றும் வீண்போவதில்லை", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com