முகப்புகோலிவுட்

“சர்க்கஸ் கலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல” – நடிகை ஸ்வேதா திரிபாதி

  | February 09, 2019 13:00 IST
Mehandi Circus

துனுக்குகள்

  • இப்படத்திற்கு ராஜு முருகன் கதை, வசனம் எழுதியிருக்கிறார்
  • சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • சர்க்கஸ் கலைஞராக சுவேதா திரிபாதி நடிக்கிறார்
ராஜு முருகன் கதை, வசனத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் படமாக உருவாகி உள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்'.  இந்த படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக பாலிவுட் நடிகை சுவேதா திரிபாதி நடிக்கிறார். இதுகுறித்து சுவேதா திரிபாதி சமீபதில் பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் திரையில் கான மிகவும் ஆவலாக உள்ளேன்.

 உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் நான் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவமாக இருந்தது. சர்க்கஸ் கலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை புத்தகங்கள் மூலமாகவும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் மூலமாகவும் நான் முன்பே தெரிந்துகொண்டேன்.
 
இருந்தாலும், அவர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் அவர்களின் உழைப்பு பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் எப்படி வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
 
சர்வதேச சர்க்கஸ் கலைஞர்களிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நம் நாட்டு கலைஞர்களுக்கு இல்லை. அவர்களது மன வலிமையாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர். படத்திற்காக ராஜா சர்க்கஸ் நிறுவனத்திடம் சின்னமனூரிலும், மதுரையிலும் பயிற்சி பெற்றேன். நடப்பது, தலைவணங்குவது போன்றவற்றை பயிற்சி செய்தேன். கத்தியை தூக்கி எறிவது எப்படி என்றும் கற்றுக் கொண்டேன்” எனறு நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்