முகப்புகோலிவுட்

'வாங்க ஒர்க் அவுட் பண்ணுவோம்' - அழைப்பு விடுத்த வரலட்சுமி

  | March 31, 2020 17:38 IST
Varalakshmi

துனுக்குகள்

 • உலகை அச்சுறுத்தும் கொரோனா பயத்தால் இந்திய நாடு
 • இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தங்களது
 • இன்ஸ்டா பக்கத்தில் இணைந்து உடற் பயற்சி செய்யலாம்
உலகை அச்சுறுத்தும் கொரோனா பயத்தால் இந்திய நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் இயங்கவில்லை, திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர். விமானம், ரயில் மற்றும் பேருந்து என்று எந்தவிதமான போக்குவரத்தும் இயங்கவில்லை. 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தங்களது மன வலிமையோடு சேர்த்து உடல் வலிமையையும் அதிபடுதினால் நிச்சயம் இந்த அசாதாரண சூழலை மனிதன் எளிதில் கடந்து வரலாம் என்பது பலரின் கூற்று. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த பிரபல நடிகை மக்கள் செல்வி வரலக்ஷ்மி ஒரு புதிய முயற்சியை தற்போது எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "வீட்டில் சலிப்புடன் நேரத்தை கடத்துபவர்கள் என்னோடு எனது இன்ஸ்டா பக்கத்தில் இணைந்து உடற் பயிற்சி செய்யலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்."
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com