முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியுடன் நடிப்பதை உறுதிசெய்த டாப்ஸி..!!

  | August 29, 2020 20:51 IST
Tapsee Pannu

கடைசியாக ‘தப்பட்’ எனும் ஹிந்தி படத்தில் காணப்பட்ட டாப்ஸி ‘ஜன கண மன’ என்ற மற்றொரு தமிழ் படத்திலும் ஜெயம் ரவியுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘ஆடுகளம்' படத்தில் மதுரையில் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடித்த டாப்ஸி பன்னு, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார். தனுஷுடனான அவரது காதல் காட்சிகள் இன்னும் இளம் பார்வையாளர்களிடையே மிகவும் கவர்ந்ததாக இருக்கின்றன. அதனையடுத்து, பல தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், தற்போது பாலிவுட்டில் அவருக்கு தனி அந்தஸ்த்து கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, அடுத்ததாக தமிழில் இப்போது, விஜய் சேதுபதியுடன் ஒரு பெரிய படத்தில் இணைந்துள்ளதாக் சமீபத்தில் யூகங்கள் எழுந்தன.  இப்படத்தை சுந்தராஜனின் மகன் தீபக் சுந்தராஜன் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்போது இப்படம் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் டாப்ஸி. அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளதாகவும், ஒரு வருடத்திற்கு முன்பே கதையைக் கேட்டு ஒத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இப்போது இப்படத்தை தொடங்குவதகான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் படப்பிடிப்பும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இப்படம் ஒரு காமெடி கதை என்றும் திறந்துள்ளார்.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டு, மிக விரைவாக முடிக்கப்படும் என்றும் கூறிய அவர், தனது அட்டவணை சுமார் 28 நாட்களில் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கடைசியாக ‘தப்பட்' எனும் ஹிந்தி படத்தில் காணப்பட்ட டாப்ஸி ‘ஜன கண மன' என்ற மற்றொரு தமிழ் படத்திலும் ஜெயம் ரவியுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com