முகப்புகோலிவுட்

தமன்னா தொழில் பக்தி உடையவர் – சிரஞ்சீவி பாராட்டு!

  | October 14, 2019 11:34 IST
Tamanna

துனுக்குகள்

 • மூன்று மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
 • இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பு கொடுத்தமைக்கு தமன்னாவிற்கு பாராட்டு
 • இப்பட நிகழ்ச்சியகளில் நயன்தாரா பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்து
Tamanna; "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தில் தமன்னாவின்  பங்களிப்பு  குறித்து சிரஞ்வீவி வியந்து பாராட்டியுள்ளார்.

தெலுங்கில் சுரேந்தர் நரசிம்ம ரெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகன படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருந்தர்ர். இவரின் மனைவியாக நயன்தாரா நடிக்க, காதலியாக தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மூன்று மாநிலங்களில் வெளியானது. நல்ல விமர்சனங்களையும், வசூல்லையும் குவித்த இந்த படம் விடுதலை போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்கை வரலாற்றை தழவி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும், படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாரா வரவில்லை. அவரைப் போலவே படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்.
 
இந்நிலையில் இது குறித்து நடிகர் சீரஞ்சீவி கூறுகையில், "படங்களில் நடிப்பதோடு மட்டும் தங்கள் பணி நிறைவடைந்து விடுவதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. நடிகை நயன் தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், நடிகை தமன்னாவின் கதாபாத்திரம் தான் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அடுத்து அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது தொழில்பக்தி மற்றும் திறமையை கண்டு நான் வியந்தேன்" என்று கூறியுள்ளார்.
 
இதற்கு முன்பு இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இப்படத்தின் தயாரிப்பாளர் ராம் சரனின் மனைவி தமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com