முகப்புகோலிவுட்

தலையணையே ஆடை.!! #PillowChallenge-ல் அசத்திய தமன்னா.!

  | April 27, 2020 09:14 IST
Tamannaah

இந்த தலையணை சவால் ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கி இணையத்தை புயலாக தாக்கியுள்ளது.

தற்போது உலகையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் COVID-19 தொற்றுநோய் மற்றும் அதனால்  விதிக்கப்பட்டுள்ள பூட்டுதலுக்கு இடையில், இணையத்தில் வைரலாகி வரும் சமீபத்திய சவால் 'தலையணை சவால்' #PillowChallenge ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பிரபலங்களால் தூண்டப்படுவதோடு, இந்த தலையணை சவால் நம் இந்திய பிரபலங்களில் பலரையும் தாக்கியது போல் தெரிகிறது. 

பல பாலிவுட் நடிகைகள் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நிலையில், இப்போது தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த தலையணை சவாலை அசாதாரணமாக ஏற்றுக்கொண்டு தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தரையில் படுத்துக் கொண்ட தமன்னா, சிவப்பு ஹீல்ஸ் மற்றும் கருப்பு நிற பெல்ட்டுடன் ஒரு வெள்ளை தலையணையை ஆடையாக அணிந்து கொண்டு முழு தோற்றத்தையும் மாற்றி மிகவும் ஸ்டைலான உணர்வைக் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. 

இந்த தலையணை சவால் ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கி இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் திரில்லரான ‘ஏஞ்சல்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புட் இந்த  தலையணை சவாலை ஏற்று புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com