முகப்புகோலிவுட்

மும்பையில் பிரபல இடத்தில் புதிய வீடு வாங்கிய தமன்னா!

  | June 24, 2019 20:47 IST
Tamannaah

துனுக்குகள்

  • விஜய்யுடன் தமன்னா நடித்த படம் சுறா
  • தனுஷுடன் வேங்கை படத்தில் நடித்துள்ளார்
  • தற்போது தெலுங்கு தமிழ் இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர்
தமிழில் முன்னணி நடிகர்களுடன நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி அடையாளம் பதித்தவர்.
தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ள அவர், மும்பையில், ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், மும்பையின் வெர்சோவில் சதுர அடி ரூ.80,778க்கு பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், தோராயமாக அபார்ட்மெண்டின் விலை ரூ.4.56 கோடி. தமன்னாவோ பிளாட் பதிவு செய்ததற்காகவே ரூ.99.60 லட்சம் வரையில் ஸ்டாம்ப் டூட்டியாக செலுத்தியுள்ளார்.
 
22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ள இந்த பிளாட்டில்  தமன்னா 14ஆவது மாடியில் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் அவரது பாட்டி இருவரும் இணைந்து அந்த புதிய வீட்டை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்