முகப்புகோலிவுட்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய தமன்னா..!

  | April 22, 2020 18:05 IST
Tamannaah

அவர் இந்த உதவியை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘Letsallhelp’ உடன் இணைந்து செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் பூட்டுதல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அன்றாடம் வேலை பார்த்து வாழ்க்கையை முன் நடத்தும் அவர்கள் வேலை, பணம், உணவு, அடைக்களம் என எதுவுல் இல்லாமல் துன்பப்படுகின்றனர். மேலும், கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கும் பலரால் செல்ல முடியவில்லை.

பல பிரபலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தங்களால் முடிந்தவரை பலரும் முயற்சித்து வருகின்றனர். அனத பட்டியலில் சமீபத்தில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதிக்காக சமீபத்தில் ரூ. 3 லட்சம் நன்கொடை அளித்த நடிகை தமன்னா, இப்போது 50 டன் உணவுப் பொருட்களை மும்பையில் ஏழைகள் தங்குமிடங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் 10,000 பேருக்கு விநியோகித்துள்ளார். அவர் இந்த உதவியை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘Letsallhelp' உடன் இணைந்து செய்துள்ளார்.

மேலும், நடிகை தமன்னா தனது ஒர்க்அவுட் வீடியோக்கள் மற்றும் த்ரோபேக் நினைவுகளுடன் பூட்டுதலின் போது தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் மகிழ்வித்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com