முகப்புகோலிவுட்

‘KGF’ யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா..?

  | May 05, 2020 10:05 IST
Yash

தமன்னா முன்னதாக கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் அத்தியாயம் 1 திரைப்படத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் பிரபலமான ஹீரோவாகிவிட்டார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு, அனைத்து பதிப்புகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

‘கே.ஜி.எஃப் : அத்தியாயம் 1' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, யாஷ், அப்படத்தின் இரண்டாவது பாகத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தை மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படத்தை படக்குழுவினர் அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோன வைரஸ் தொற்று ஒட்டுமொத்த திரையுலகையும் முடக்கியுள்ள நிலையில், திரைப்பட வெளியீட்டுத் தேதிகளில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது யாஷ் தனது அடுத்த படமாக ‘மஃப்டி' புகழ் இயக்குநர் நார்தன் இயக்கும் புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார். இப்படத்தில், தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா முன்னதாக கன்னடத்தில் ‘ஜாகுவார்' திரைப்படத்திலும், கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ஒரு சிறப்பு பாடல்களிலும் நடனமாடியுள்ளார்.

‘மஃப்டி' திரைபடத்தை சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோரைக் கொண்டு, தமிழில் ரீமேக் செய்ய இயக்குநர் நார்தன் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com