முகப்புகோலிவுட்

சுந்தர் சி படத்தில் ராணுவ வீரராக அசத்தும் தமன்னா!

  | September 06, 2019 11:58 IST
Tamanna

துனுக்குகள்

  • சுந்தர் சி இப்படத்தை இயக்கிவருகிறார்
  • இப்படத்தில் தமன்னா ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்
  • இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து விஷாலை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தமன்னா கமாண்டோ வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எடுத்திருக்கிறார்.
 
விஷாலுடன் இவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.  70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடந்துவருகின்றன'.  
 
விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தை அடுத்து சுந்தர் சி பேய் படம் ஒன்றை இயக்க விருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்