முகப்புகோலிவுட்

தமன்னா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

  | July 19, 2019 14:14 IST
Tamannaah

துனுக்குகள்

  • தமன்னா முதல் முறையாக தமிழில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இது
  • இப்படத்தை அதே கண்கள் படத்தை இயக்கி ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார்
  • யோகி பாபு, கலையரசன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்
சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே' ஏ.எல்.விஜய்யின் ‘தேவி 2' படங்களைத் தொடர்ந்து ரோஹின் வெங்கடேசன் இயக்கும் ‘பெட்ரோமாக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.
 
தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், தனுஷ், விஜய்சேதுபதி, பிரபு தேவா உள்ளிட்டவர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிபடங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கும் ‘பெட்ரோமாக்ஸ்' படத்தில் முதன்மை கதபாத்திரத்தில் நடிக்கிறார்.  
 
இப்படத்தில் யோகிபாபு, காளி வெங்கட், டி.எஸ்.கே, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதே கண்கள் படத்திற்கு இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்திற் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்