முகப்புகோலிவுட்

தீபாவளி களத்தில் விஜய் கார்த்தியுடன் போட்டியிடும் தமன்னா!

  | September 19, 2019 18:20 IST
Petromax

துனுக்குகள்

  • தீபாவளி அன்று இப்படம் வெளியாகி இருக்கிறது
  • இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா
  • இப்படத்தில் யோகிபாபு காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெட்ரோமாஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
 
இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகை தமன்னா நடித்துள்ள படம் 'பெட்ரோமாஸ்'. இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் தமன்னா இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ராம் இசை அமைத்துள்ள இந்த படத்தை ஈகில் ஐ புரடெக்ஷ்ன் கம்பெனி தயாரித்துள்ளது.
 
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய 2படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீபாவளி களத்தில் விஜய் மற்றும் கார்த்தியின் படங்களோடு ‘பெட்ரோமாஸ்' மோதவிருக்கிறது. பொருத்திருந்து பார்ப்போம்!
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்