முகப்புகோலிவுட்

மலையாளத்தில் கால்பதிக்கும் அஷோக் செல்வன்..! மோகன்லாலின் ‘மரக்கர் ‘ படத்தில் முக்கிய ரோல்..!

  | February 06, 2020 11:53 IST
Achuthan

மோகன்லாலிமன் ‘மரக்கர் : அரபிக்கடலிண்டே சிம்மம்’ எனும் மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன்.

மோகன்லாலிமன் ‘மரக்கர் : அரபிக்கடலிண்டே சிம்மம்' எனும் மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன்.

அசோக் செல்வன் தற்போது ‘ஓமைகடவுலே' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு, Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், விஜய் சேதுபதி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தையடுத்து அஷோக் செல்வன், மலையாள சினிமா துறையில் அறிமுகமாகிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வரலாற்றுத் திரைப்படம் ‘மரக்கர் : அரபிக்கடலிண்டே சிம்மம்'. இப்படத்தில் நான்காம் குஞ்சலி மரக்கராக மோகன் லால் நடிக்கிறார். இப்படத்தில், ‘அச்சுதன்' எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஷோக் செல்வன் நடிக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது..,

மேலும் இப்படத்தில் சுனீல் ஷெட்டி, அர்ஜுன் சர்ஜா, பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், சித்திக், முகேஷ், நெடுமுடி வேணு, சுஹாசினி மணிரத்னம், ஜே ஜே.ஜக்ரித், மேக்ஸ் கேவன்ஹாம், மற்றும் டோபி சார்பேக் என பிரபலங்களின் பட்டாளமே நடிக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்