முகப்புகோலிவுட்

66வது தேசிய விருது பட்டியலில் புறம்தள்ளப்பட்ட தமிழ் படங்கள்! அதிர்ப்தியில் தமிழ் சினிமா ரசிகர்கள்!

  | August 10, 2019 13:08 IST
National Awards

துனுக்குகள்

 • திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியல் அறிவிப்பு
 • தமிழில் பாரம் படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது
 • சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து  தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
 
fo8444g

 
அதில் ‘பாரம்' என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை கைப்பற்றியது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி' படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
69hesntg

மற்ற எந்த பிரிவுகளிலும் தமிழ் திரைப்படங்கள் இடம் பெறாதது தமிழ் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில், பரியேறும் பெருமாள், வடசென்னை, இரும்புத்திரை, 96, ராட்சன், 2.0, வடசென்னை, சூப்பர் டீலக்ஸ், சர்வம் தாளமயம், சீதகாதி, கனா, ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. பல்வேறு விருது வழங்கும் நிகழ்வுகளில் பங்கு பெற்ற இப்படங்கள் பல்வேறு விருதுகளை கைப்பற்றியுள்ளது.  இருந்த போதிலும்.
இப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது தமிழ் ரசிகர்கள் உட்பட தமிழ் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படங்களை தேர்வு செய்ததில் அதிர்ப்தி அடைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com