முகப்புகோலிவுட்

நாளை மறுநாள் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்..!

  | December 04, 2019 11:24 IST
Movie Released

துனுக்குகள்

 • கதிர் நடிக்கும் ஜடா திரைப்படத்தை குமரன் இயக்கியுள்ளார்.
 • தினேஷ் நடிக்கும் குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.
 • தனுசு ராசி நேயர்களே படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
இம்மாதம் 6-ஆம் தேதி 4 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
 
de4ppmug

இயக்குநர் பா. ரஞ்ஜித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்ட கத்தி' தினேஷ் மற்றும் ‘கயல்' ஆனந்தி நடிக்கும் திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி ‘குண்டு'. மேலும் இப்படத்தில் ரித்விகா, ஜான் விஜய், முனீஸ்காந்த், லிஜீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார்.
 
13hmk5a

குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஜடா'. இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார், மேலும் யோகி பாபு, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். விளையாட்டு-திகில் வகையைச் சேர்ந்த இப்படத்துக்கு சி.எஸ். சாம் இசையமைக்கிறார்.
 
6dgc35tg

ஹரிஷ் கல்யாண்-டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்கும் திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே'. இப்படத்தை பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘பிகில்' திரைப்படத்தில் நடித்த ரெபா மோனிகா இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கிறார்.
 
6im12gr8
சுந்தர் சி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘இருட்டு'. திகில் வகையைச் சேர்ந்த இப்படத்தை வி.இசட். துரை இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா, விமலா ராமன், சாக்‌ஷி சௌத்ரி, யோகி பாபு, விடிவி கனேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘அவள்' திரைப்படத்துக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.

சிறிய பட்ஜட் படங்களாக இருந்தாலும், இப்படங்களின் கதைக்களம், நடிகர்கள், இயக்குநர்களால் ரசிகர்களிடையே இப்படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 திரைப்படங்களும் இம்மாதம் 6-ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com