முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத்தேர்தல் செல்லாது! தமிழக அரசு அதிரடி!

  | October 17, 2019 11:39 IST
Nadigar Sangam

துனுக்குகள்

 • ஜுன் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது
 • இதில் நாசர் அணி பாக்கியராஜ் அணி போட்டியிட்டனர்
 • நேற்று விசானைக்கு வந்த வழக்கை வரும் 18ம் தேதி ஒத்தி வைத்தார் நீதிபதி
நடிகர் சங்கத்தால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என தமிழ்நாடு அரசு தரப்பு வாக்கறிஞர் கடும் வாதம்.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் 23ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நாசர், விஷால் அணிக்கு எதிராக பாக்கியராஜ் அணி போட்டியிட்டது.
 
பல்வேறு தடைகளை கடந்து நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பல திரைகலைஞர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். காலை தொடங்கி மாலை 6மணிவரை நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்கு பதிவானது.
 
தேர்தல் முடிவடைந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாக்காளர்களில் குளறுபடி இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு உயர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று விசாரணைக்கு வந்த இநத வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.
 
இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும், 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 18ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com