முகப்புகோலிவுட்

அறிவித்தபடி வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர் KJ ராஜேஷ்.!

  | July 03, 2020 21:54 IST
Kjr Studios Rajesh

KJ ராஜேஷ் விஸ்வாசம், குலேபகாவலி, க/பெ. ரணசிங்கம், ஹீரோ, அயலான், டாக்டர் என பல படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், வீர மரனம் அடைந்த 20 ராணுவ வீரர்களில், இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ‘ஹவில்தார்' பழனியும் ஒருவர். ஹவில்தார் பழனிக்கு மனைவி வானதி தேவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழக அரசு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்தது.

பிரபல தமிழ் தயாரிப்பாளர் கொட்டப்பாடி. ஜே. ராஜேஷ் பழனியின் தியாகத்திற்கு வணக்கம் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

KJR Studios-ன் உறிமையாளர் கொட்டப்பாடி. ஜெ. ராஜேஷ், இன்று, தனது பிரதிநிதிகள் மூலமாக தான் அறிவித்த ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை பழனியின் வீட்டுக்கே சென்று அவரது மனைவியிடம் கொடுக்கச் செய்துள்ளார். மேலும், பழனியின் பிள்ளைகளின் படிப்புகளுக்கும் உதவி செய்ய பொருப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் ‘அறம்' திரைப்படத்தினை தயாரித்ததன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கொட்டப்பாடி. ஜே. ராஜேஷ், அஜித்தின் விஸ்வாசம், குலேபகாவலி, ஐரா, விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம், சீவகார்த்திகேயனின் ஹீரோ, அயலான், டாக்டர் என பல படங்களை தயாரித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com