முகப்புகோலிவுட்

நடிகர்சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் பிரபல தயாரிப்பாளர்..!

  | June 04, 2019 15:28 IST
Vishal

துனுக்குகள்

 • நடிகர்சங்கத் தேர்தல் வரும் ஜுன் 23ல் நடைபெற இருக்கிறது
 • கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற்று செயலாளராக இருந்தார்
 • தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 
இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனறு அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஒரு தலைவர், இரண்டு உப தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பல்வேறு சமயங்களில் விஷால் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவரும் விஷாலுக்கு எதிராக களமிறங்குவார் என்று வதந்திகள் பரவியது. ஆனால் அதனை மறுத்துள்ள சுரேஷ், தான் போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்தார். எனினும் விஷாலுக்கு எதிராக தங்கள் அணியின் சார்பில் ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளதாக அவர் கூறினார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com