முகப்புகோலிவுட்

பிரம்மாண்டமான சென்னை திரைப்பட விழா - தமிழக அரசு நிதி உதவி!

  | November 19, 2019 15:40 IST
Chennai Film Festival

துனுக்குகள்

 • 17வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது
 • 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது
 • 75ஆயிரம் ரூபாய் நிதி உதவியை முதல்வர் வழங்கினார்
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக முதலமைச்சர் நிதி உதவி அளித்துள்ளார். 

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 17வது சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு மொழி, கலாச்சாரங்களை அறியப்படுத்தும் திரைப்படங்களும் இடம் பெறும். ஆண்டுதோறும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு நடைபெறும் இவ்விழாவிற்காக சினிமா ரசிகர்கள், சினிமா விமர்சர்கள் ஆர்வத்துடன் கண்டு களிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இவ்விழாவிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
இந்நிலையில், இந்த விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய்கான காலோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திரையுலகை சேர்ந்த மனோபாலா, பூர்ணிமா பாக்கியராஜ், மோகன் ஆகியோரிடம் வழங்கினார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com