முகப்புகோலிவுட்

அனிரூத் குரலில் "தமிழன் என்று சொல்லடா" - வெளியானது இரண்டாவது Glimpse காட்சி..!

  | September 08, 2020 12:08 IST
Tamizhan Endru Solada Glimpse

துனுக்குகள்

 • ஆரம்ப நிலையில் சற்று தடுமாறினாலும் அண்மைக்காலமாக வெகு சிறப்பாக
 • ‘பூமி' படத்தை லக்ஷ்மன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் இயக்குநருக்கு
 • 'தமிழன் என்று சொல்லடா' என்ற பாடல் நாளை ஜெயம் ரவி பிறந்தநாளை
பிரபல இயக்குநர் மோகன் ராஜா அவர்களின் தம்பி தான் ஜெயம் ரவி. ஆரம்ப நிலையில் சற்று தடுமாறினாலும் அண்மைக்காலமாக வெகு சிறப்பாக கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவருடைய நடிப்பில் ‘பூமி' என்ற திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது, மேலும் இப்படம் ரவியின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் அவரது 25வது படமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தொற்றுநோய் காரணமாக, படம் தாமதமாகிவிட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது, அதற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது.

‘பூமி' படத்தை லக்ஷ்மன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் இயக்குநருக்கு ஜெயம் ரவியுடன் மூன்றாவது படமாகும். முன்னதாக இருவரும் இணைந்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ‘பூமி' திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

வேளாண்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் படமாக்கப்பட்டு வருகிறது, மேலும் இப்படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இமான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் இருந்து 'தமிழன் என்று சொல்லடா' என்ற பாடல் நாளை ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் அந்த பாடலின் இரண்டாவது glimpse காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com