முகப்புகோலிவுட்

"Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது" - சூர்யாவை சாடும் மீரா மிதுன்..!

  | July 31, 2020 08:48 IST
Suriya

துனுக்குகள்

 • சர்ச்சை ட்வீட்களுக்கு பெயர்போன நடிகையும் மாடல் அழகியான மீரா மிதுன்
 • ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
 • சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வழக்கம் உள்ளது, சரியாக
சர்ச்சை ட்வீட்களுக்கு பெயர்போன நடிகையும் மாடல் அழகியான மீரா மிதுன் அண்மையில் பிரபல நடிகை த்ரிஷாவை கண்டித்து ஒரு செய்தியை பதிவிட்டார். மேலும் தன்னை CM ஆக்கினாள் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் தீர்ப்பேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கே நேரடியாக ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலனமான இவர் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் என்று பலரையும் சாடி வருகின்றார். இந்நிலையில் சுஷாந்த் அவர்களின் மரணத்திற்கு பிறகு அண்மைக்காலமாக Nepotism மற்றும் Movie Mafia போன்ற விஷயங்கள் குறித்த பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. மீரா மிதுனும் தானும் பலமுறை அதை அனுபவித்திருப்பதாக கூறிய வருகின்றார். 

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பதிவில் "சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வழக்கம் உள்ளது, சரியாக படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பு ஒரு சமூக பிரச்னையை பற்றி பேசுவார்கள். தற்போது EIA குறித்து சூர்யா பேசுவது போல பொன்மகள் வந்தாள் ரிலீஸ் நேரத்தில் ஜோதிகா கோவில்களை பற்றி பேசினார். இதெல்லாம் வெறும் கண்ணதுடைப்பு" என்று கூறி ட்வீட்  செய்துள்ளார். மேலும் சூர்யாவிற்கு நடிக்க தெரியாது என்று கூறி ஒரு ஆடியோவும் வெளியிட்டுள்ளார். 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com