முகப்புகோலிவுட்

“ராட்சசி” படத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிப்பு! இயக்குநர் கௌதம் விளக்கம்!

  | July 16, 2019 16:28 IST
Jyothika

துனுக்குகள்

  • ராட்சசி திரைப்படம் அரசு பள்ளி நிர்வாக சீர்கேடு குறித்து பேசம் படம்
  • இந்த படத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • இப்படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கி இருக்கிறார்
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ராட்சசி' இந்த படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் அரசு பள்ளியை சீர் அமைத்து மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் கதை அம்சம் கொண்டதாக இருந்தது.
 
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்
ஜோதிகா நடித்துள்ள ராட்சசி திரைப்படத்தில் அரசு பள்ளிகள், ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து இப்படத்தின் இயக்குநர் கௌதமிடம் பேசினேன்.
 
fk8mmp1g

 
“இந்தப்படத்தை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது. இது போன்று உண்மையாகவே அரசு பள்ளிகள் மாறினால் தனியார் பள்களை நோக்கி நாங்கள் செல்ல மாட்டோம் என்று தெரிவிக்கிறார்கள். பள்ளி கல்விதுறையில் பணியாற்றும் பலரும் என்னை தொடர்பு கொண்டு “நாங்கள் பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை அப்படியே எடுத்திருக்கிறீர்கள்” என்று வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இந்த படத்தில் ஆசிரியர்களை நான் தவறாக சித்தரிக்கவில்லை அது என்னுடைய நோக்கமும் இல்லை. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைத்தான் கூறியிருக்கிறேன். மேலும் இது ஆசிரியர்களுக்கான படம் இல்லை. பள்ளிகளில் உள்ள நிர்வாகத்தின் பிரச்னையைப் பற்றி பேசும் படம். பல ஆசிரியர் சங்கங்கள் இருக்கின்றன எல்லா ஆசிரியர்களும் இதை எதிர்க்கவில்லை ஒரு தரபினர்தான் எதிர்கிறார்கள்.
 
sspaq8go

 
ஆசிரியர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் என்ற அளவு கோளில் இருக்கும் இந்த கோபத்தை அவர்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற அளவுகோளில் திசை திருப்பினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தவறான புரிதலினால் கூட அவர்கள் இப்படி எதிர்ககலாம். இந்த படத்திற்கு எதிர்ப்பை விட ஆதரவுதான் அதிகம் அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.” என்றார்
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்